திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு


திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x

திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் பக்தர்களை செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு வழியில் செல்ல கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவில் ஊழியருக்கும் பக்தர் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் பக்தர்களை சிறப்பு வழியில் அனுமதிக்க வலியுறுத்தி கடந்த வாரம் திருத்தணி அ.தி.மு.க. நகர செயலாளர் செளந்ததரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் துணை ஆணையர் விஜயாவை சந்தித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள சிறப்பு வழியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதை தடை செய்ய கூடாது என தெரிவித்து, மனு ஒன்றையும் அளித்தார். ஆனால் கோவில் நிர்வாகம் கடந்த வாரமும் உள்ளூர் பக்தர்களை சிறப்பு வழியில் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்தரவின் படி நேற்று திருத்தணி நகர் முழுவதும் முருகன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story