அதிமுக மாநாட்டில் உணவு வீணாக கொட்டப்பட்ட விவகாரம்: மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம்


அதிமுக மாநாட்டில் உணவு வீணாக கொட்டப்பட்ட விவகாரம்: மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம்
x

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது.

மதுரை,

மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. மூன்று கூடங்களில் ஏராளமான உணவுகள் (சுமார் 40 அண்டா) கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், மாநாட்டில் உணவு வீணாக கொட்டப்பட்ட விவகாரம் குறித்து மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் கணபதி கூறுகையில், மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு மூன்று கவுண்டர்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரு கவுண்டர்கள் மேடைக்கு அருகாமையில் இருந்தது. எனவே இந்த இரு கவுண்டர்களில் அதிக அளவில் மக்கள் வருகை தந்தனர். இந்த இரு கவுண்டரிலும் உணவுகள் மீதமாகவில்லை.

பார்கிங் அருகில் 3வது கவுண்டர் இருந்தது. இந்த கவுண்டல் உணவு வழங்கப்பட்டதை பலரும் அறியவில்லை. இதனால், அங்கு உணவு வீணாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story