அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கொலை மிரட்டல் - கூட்டுறவு சங்க தலைவர் கைது


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கொலை மிரட்டல் - கூட்டுறவு சங்க தலைவர் கைது
x

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சங்கரன்கோவில்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணபாண்டியன் (37) இவர் அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார்.

சம்பவத்தன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு போனில், நாளை பூலித்தேவர் பிறந்த தினத்திற்கு அவர் வருவதை முன்னிட்டு பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து கொக்குகுளம் அதிமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த சரவண பாண்டியனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story