அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல.
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story