அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை - ஆர்.பி.உதயகுமார்


அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை - ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 26 Jun 2022 9:59 AM IST (Updated: 26 Jun 2022 10:02 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து அவர் கூறுகையில்,

"நிர்வாக சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். கட்சி மற்றும் தொண்டர்களின் நலனுக்காவும், எதிகாலத்திற்காகவும் நான் உட்பட மூத்த தலைவர்கள் ஓபிஎஸ் அவர்களின் இல்லம் தேடி சென்று பேச்சுவார்த்தைக்காக அவரை அனுகினோம். ஆனால், ஒரு தலைவரே பொதுக்குழு நடத்தக்கூடாது என்று சொல்வது எங்கேயும் கேட்டது கிடையாது.காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்த வரலாறை எங்கும் பார்த்தது கிடையாது.


அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர். பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.


ஆனால் அவர் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டினார். அவர் அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை. சந்தேக தலைமை வேண்டாம்". இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story