இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்: நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்: நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2023 5:29 AM GMT (Updated: 2023-02-10T11:01:55+05:30)

கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நெல்லை,

நெல்லையில் திருமண விழா ஒன்றில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது,

கடந்த 21 மாதங்களாக திமுக ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கவில்லை. சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, ரவுடிகளின் அட்டூழியம் அதிக அளவில் அதிகரித்து உள்ளது. பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதை பொருள் இளைஞர்களிடத்தில் அதிகரித்துள்ளது. காவல்துறை வாகனத்தை திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கொட்டுள்ளது.

கடலில் பேனா வைக்கவேண்டிய அவசியம் இல்லை. தரையில் வைக்கலாம். எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவு செய்வது தேவையற்றது.

அதிமுகவிற்கு யாரும் உதவவில்லை. அதிமுக தான் பலருக்கும் உதவியாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அதிமுக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story