தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்


தீபாவளியை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
x

ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உப பொருட்களின் விற்பனையை கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆவின் பால் உப பொருட்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இனிப்பு, காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



Next Story