ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநாடு
ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் 8- வது மாநாடு காந்திகிராமத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். .மாவட்ட இணை செயலாளர் கந்தசாமி வரவேற்று பேசினார். மாநாட்டை மாநில செயலாளர் பாலன் தொடங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் வடிவேலன் வேலை அறிக்கையை வாசித்தார். மாநாட்டில் கரூர் மாவட்ட தொழிலாளர்களின் அனைத்து வேலைகளிலும் வெளி மாநில தொழிலாளர்களை புகுத்தாமல் உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும், கட்டிட தொழிலாளர்களுக்கு மாதம் பென்ஷன் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கட்டுமான மூத்த தொழிலாளர்களுக்கு முதியோர் இல்லம் அமைக்க தமிழகம் முழுவதும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story