விஷ சாராய மரணங்கள் மற்றும் பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்- சென்னையில் வரும் 22 ஆம் தேதி அதிமுகவினர் பேரணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த பேரணி நடைபெற உள்ளது.
சென்னை,
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாகவும், அரசியலில் புயலை கிளப்பிய பிடிஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், விஷ சாராய மரணங்கள் மற்றும் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி பேரணியாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரும் 22-ந்தேதி கவர்னரை சந்தித்து பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளனர்.
Related Tags :
Next Story