ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு


ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு
x

சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்தியாவுக்கான ரஷிய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வரும் 11, 12 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், வரும் 17-ந்தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


1 More update

Next Story