அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story