"அமைதியான தமிழகத்தை மதச்சார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சி"… கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு


அமைதியான தமிழகத்தை மதச்சார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சி… கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு
x

மத வேற்றுமையை உருவாக்க தமிழ்நாட்டில் முயற்சி நடப்பதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை மதச்சார்புள்ள தமிழ்நாடாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

"அமைதியாக உள்ள தமிழ்நாட்டை வேண்டுமென்றே மதச்சார்புள்ள தமிழ்நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். மத வேற்றுமையை உருவாக்க வேண்டுமென்று செயற்கையாக உருவாக்கி, அதை மற்ற இயக்கங்கள் மீது பழியை போடுவதற்கு தமிழகத்தில் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோவிலுக்கு செல்வது தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story