மதுரை மத்திய சிறையில் இருக்கும் மகளை கஞ்சாவுடன் பார்க்க வந்த மூதாட்டி கைது


மதுரை மத்திய சிறையில் இருக்கும் மகளை கஞ்சாவுடன் பார்க்க வந்த மூதாட்டி கைது
x

மதுரை மத்திய சிறையில் இருக்கும் மகளை கஞ்சாவுடன் பார்க்க வந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக சிறைகள் உள்ளது. இதில் பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அனைவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்வது வழக்கம்.

அதன்படி பெண்கள் சிறையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுசீலாமேரியை பார்க்க அவரது தாயார் பாத்திமாமேரி (வயது 62) என்பவர் இன்று காலை வந்தார்.

அவரை பெண் சிறைக்காவலர்கள் நுழைவு வாயிலில் சோதனை செய்தனர். அப்போது அவர் மேலாடையின் உள்ளே தடை செய்யப்பட்ட 120 கிராம் எடை கொண்ட 17 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை பெண் சிறைக்காவலர்கள் பிடித்து அவரிடமிருந்த கஞ்சாவை கைப்பற்றினார்கள்.

பின்னர் இது குறித்து பெண்கள் தனிச்சிறை துணை அதிகாரி ஜெயகவுரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் பிடிப்பட்ட பாத்திமாமேரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சாவை மகள் மூலம் அங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மத்திய சிறை துணை கண்காணிப்பாளர் வசந்தகண்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் போலீசில் மூதாட்டியை ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பாத்திமாமேரியை கஞ்சாவுடன் கரிமேடு போலீசில் சிறைகாவலர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பாத்திமாமேரியை கைது செய்தனர். மகளுக்கு கஞ்சாயை மறைத்து கொண்டு வந்து மாட்டிக்கொண்ட மூதாட்டியால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story