நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணையவழி விண்ணப்பம் வினியோகம் துணை வேந்தர் ராம.கதிரேசன் தொடங்கி வைத்தார்


நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை:    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணையவழி விண்ணப்பம் வினியோகம்  துணை வேந்தர் ராம.கதிரேசன் தொடங்கி வைத்தார்
x

நடப்பு கல்வி ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணியை துணை வேந்தர் ராம.கதிரேசன் தொடங்கி வைத்தார்.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில், அனைத்து துறையிலும் இளம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப வினியோகம் நேற்று முதல் தொடங்கியது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள சிண்டிகேட் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் தலைமை தாங்கி, இணையவழி விண்ணப்ப வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத், புலமுதல்வர்கள், இயக்குனர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆகஸ்டு 8-ந்தேதி கடைசி நாள்

தொடர்ந்து, துணைவேந்தர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் வருகிற 8.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.


Next Story