ராமேஸ்வரம் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்ட அண்ணாமலை
ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்டார்.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். நேற்று அக்னி தீர்த்த கடல், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய அவர் கோவிலில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
முன்னதாக ராமேஸ்வரம் வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று அண்ணாமலை, ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்டார். இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story