போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்


தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 7:39 AM GMT)

கோவில்பட்டியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி போலீஸ் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து ஊர்வலம் நடந்தது. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுதாகர், என்.சி.சி. அலுவலர் பூப்பாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்த பிரபாகரன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் எட்டயபுரம் ரோடு, மகளிர் போலீஸ்நிலையம் வரை சென்று, மீண்டும் பள்ளிக்கூடத்தை வந்து ேசர்ந்தது.


Next Story