கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்


கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
x

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

நகர் ஊரமைப்பு துறையின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதியில் 1-1-2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இந்த துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 14-6-2018-ல் வெளியிடப்பட்டன. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாத காலம் காலநீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அரிய வாய்ப்பு என்பதால் அதனை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக இணை இயக்குனர் தொிவித்துள்ளார்.


Next Story