குற்றப்பிரிவு போலீசார் நியமனம்


குற்றப்பிரிவு போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:56+05:30)

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் நியமனம் சூப்பிரண்டு நடவடிக்கை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தை ஆய்வுமேற்கொண்ட வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் திருக்கோவிலூரில் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் குற்ற பிரிவு போலீசார் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீஸ் ஏட்டுகள் மற்றும் போலீசாரை கொண்ட குற்ற பிரிவு போலீஸ் படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்படி நியமனம் செய்யப்பட்ட குற்றப்பிரிவு போலீசார் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஏற்கனவே நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்து, திருடு போன பொருட்களை மீட்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசாருக்கு முதற்கட்டமாக 2 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. வருகிற 28-ந் தேதிக்குள் மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும். திருக்கோவிலூர் நகரில் ஷிப்டு முறையில் போலீசார் ரோந்து பணியில் வருவது உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தெரிவித்தார்.


Next Story