தமிழகம், புதுவையில் ஏப். 4 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


தமிழகம், புதுவையில் ஏப். 4 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 31 March 2023 1:56 PM IST (Updated: 31 March 2023 2:00 PM IST)
t-max-icont-min-icon

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story