மது அருந்தும் போது தகராறு; ஜவுளிக்கடைக்குள் புகுந்து 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு


மது அருந்தும் போது தகராறு; ஜவுளிக்கடைக்குள் புகுந்து 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
x

பெரவள்ளூரில் ஜவுளிக்கடைக்குள் புகுந்து 17 வயது சிறுவனை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பேப்பர் மில்ஸ் சாலையில் சென்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் துரத்தியதாக தெரிகிறது. அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையின் ஆடை மாற்றும் அறையில் ஒளிந்த சிறுவனை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டிச் சென்றனர்.

தலை, இடது முழங்கை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த சிறுவன், பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற திரு.வி.க. நகர் போலீசார், ஜவுளிக்கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தாக்குதலுக்கு ஆளான சிறுவன், அவரது நண்பர் பயாஸ் ஆகியோர் மது அருந்தும் போது, சூர்யா என்ற நபரை அடித்ததாகவும், இதனால் பழிவாங்க தனது நண்பர்களை அழைத்துச் சென்று சூர்யா தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.




Next Story