துப்பாக்கிசூட்டில் பலியான ராணுவ வீரர்.. சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட உடல் - திடீரென ஆம்புலன்சை மறித்த ஊர் மக்கள்
யோகேஷ்குமார் உடலுக்கு அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் வனவாசி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் உடல் பஞ்சாபில் இருந்து சொந்த ஊரான சேலம் வனவாசி பகுதிக்கு வந்தடைந்தது.
இந்த நிலையில் ராணுவ வீரரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கவில்லை என்று கூறி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ராணுவ வாகனத்தில் உடல் எடுத்து வரப்படவில்லை என்றும், அரசு மரியாதை வழங்கப்படவில்லை என்று கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story