மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் பையர்நத்தம், பொம்மிடி, திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பையர்நத்தம் பகுதியில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க முயன்றதாக, அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 42), ராஜ்குமார் (36), செந்தில் (40), திப்பிரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த ஜானகி, (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபட், மோட்டார் சைக்கிள் மற்றும் 164 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story