சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது


சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர் கைது
x

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சாவை கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சாவை கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்

சேலம் வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் ெரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கே.மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் ஈரோடு ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் தரம் சிங் மீனா மற்றும் குழுவினர், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் புதுடெல்லியில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12626) சோதனை நடத்தினர்.

இந்த ரெயிலில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை சோதனை நடத்தப்பட்டது. அந்த ரெயில் மாவெலிபாளையம்-சங்ககிரி இடையே சென்ற போது எஸ்-1 என்ற பெட்டியில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படியான பெரிய பை ஒன்று இருந்தது, இதையடுத்து போலீசார் அந்த பை யாருடையது என்பது குறித்து விசாரித்தனர்.

பறிமுதல்-கைது

விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வனபார்தி பாபிராஜ் (வயது 31) என்பவருடயது என தெரியவந்தது. மேலும் போலீசார் அந்த பையை திறந்து சோதனை செய்ததில் 19 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், 19 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story