அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்கள் கைது
நாமக்கல்லில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லை சேர்ந்த ரவுடி காசியை ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்ததாக ஆம்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி நல்லிபாளையம் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் முத்துக்குமார் (வயது 28), அஜித்குமார் (25) ஆகியோர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக முத்துக்குமார், அஜித்குமார் 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story