தொப்பூர் அருகே முனியப்பன் கோவில்களில் உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது


தொப்பூர் அருகே முனியப்பன் கோவில்களில் உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 1:00 AM IST (Updated: 28 Jun 2023 1:19 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தாதநாயக்கன்பட்டி மற்றும் மாட்டுக்காரனூர் கிராமங்களில் முனியப்பன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் மர்ம நபர் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் 2 கோவில்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கோவில்களில் உண்டியலை உடைத்து, பணத்தை திருடியவர், சனிசந்தை பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் பூவரசன் (வயது21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் முனியப்பன் கோவில்களில் திருடிய பணத்தை, கோவில் வளாகத்தில் அமர்ந்து எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story