வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர் கைது


வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர் கைது
x

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், சர்ச் தெருவில் இலங்கையை சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கிருந்த 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீத் (வயது 52) என்பவர் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை அழைத்து வந்து தங்க வைத்திருந்ததும், ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையை சேர்ந்தவர்களை சென்னைக்கு அழைத்து வந்ததாலும், விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்கி இருந்தாலும் அப்துல் ஹமீதை போலீசார் கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story