ஆறுமுகநேரி, ஆத்தூரில் குழாயில் குடிநீர் வினியோகம் தொடக்கம்


ஆறுமுகநேரி, ஆத்தூரில் குழாயில் குடிநீர் வினியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 7:39 AM GMT)

ஆறுமுகநேரி, ஆத்தூரில் குழாயில் குடிநீர் வினியோகம் திங்கட்கிழமை முதல் தொடங்கியது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ஆத்தூர் பகுதியில் குடிநீர் திட்டப்பகுதியில் வறட்சி நிலவியதால் கடந்த 6 நாட்களாக குழாய் மூலம் குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, பொன்னங்குறிச்சியிலிருந்து மேலாத்தூர் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் ஆறுமுகநேரியில் உள்ள தெருக்குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. வீட்டு இணைப்புகளுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து குழாய் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டும் என்று நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

இதுபோல ஆத்தூரிலும் நேற்று பகலில் தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. மாலை முதல் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் வினியோகம் தொடங்கியதாக, நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தெரிவித்தார்.


Next Story