வியாபாரி, மனைவி மீது தாக்குதல்
பண்ருட்டி அருகே வியாபாரி, இரவது மனைவி ஆகியோரை தாக்கிய தம்பதி உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டியை அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் பாலச்சந்தர் (வயது 39). இவரும், அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கூட்டாக சேர்ந்து பலாப்பழ வியாபாரம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் தச்சம்பாளையம் முருகன் கோவில் அருகே இருந்த பாலச்சந்தரை, செல்வராஜ், இவரது மனைவி செல்வகுமாரி, மகள் அர்ச்சனா ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை அசிங்கமாக திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். இதை தடுக்க வந்த பாலச்சந்தரின் மனைவி பரமேஸ்வரியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் செல்வராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.