திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி தீ்க்குளிக்க முயற்சி


திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி தீ்க்குளிக்க முயற்சி
x

திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி தீ்க்குளிக்க முயன்றார்.

திருவள்ளூர்

ஆக்கிரமிப்பு குடிசை அகற்றம்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட புதுமாவிலங்கை கண்டிகையில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு துணை தாசில்தார் சுந்தர் தலைமையில், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் மற்றும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது தொழிலாளி செல்வராஜ்(வயது 53) தனது குடிசையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், வருவாய்துறை அதிகாரி இணைந்து அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசையை முழுவதுமாக அகற்றினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story