பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை,

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'ஆளண்டாப்பட்சி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு விருது வென்றுள்ளதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மண்ணோடு இயைந்த மொழிவழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள்முருகனின் 'ஆளண்டாப்பட்சி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'FireBird', 'JCB Prize For Literature' எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள்!" என்று கூறியுள்ளார்.


1 More update

Next Story