போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 2 July 2023 2:15 AM IST (Updated: 2 July 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை நகர பகுதியில் போக்குவரத்து ஒழுங்கமைப்பு, குற்ற தடுப்பு, சி.சி.டி.வி. கேமரா அமைத்தல் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர், சுவாமிமலை பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் விஜயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுவாமிமலை முருகன் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் குற்றங்கள் நடக்காமல் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாகவும், சுவாமிமலை பகுதியில் போதை பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைப்பது தொடர்பாகவும், ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.


Next Story