பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கொட்டப்பாக்கத்துவேளியில் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை கொட்டப்பாக்கத்துவேளி புறவழிச்சாலை அருகில் உள்ள பால விநாயகர், பாலமுருகன், அங்காளம்மன், நாகத்தம்மன் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு முதல் மற்றும் 2-ம் கால யாக பூஜைகள், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், கும்ப பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 10 மணியளவில் கோவிலின் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன்சம்பத், மாவட்ட தலைவர் சாய்கமல், செயலாளர் மணிகண்டன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 10 மணியளவில் சாமிவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.