சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போா்டில் வந்த வங்காளதேச வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போா்டில் வந்த வங்காளதேச வாலிபர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போா்டில் வந்த வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது டுலல் சன்ட்ரா (வயது 38) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டில் ஒருவர் வந்தார். அவரது பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது அது போலி என தெரியவந்தது. உடனடியாக அந்த பயணியை வெளியே விடாமல் குடியுரிமை அலுவலக அறையில் வைத்து கியூ பிரிவு போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தினா். அதில் அவர், வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சா்வதேச போலி பாஸ்போா்ட் கும்பலிடம் பணம் கொடுத்து இந்திய போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது. இந்த போலி பாஸ்போா்ட்டை பயன்படுத்தி கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்துள்ளாா்.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், வங்காளதேச பயணியை கைது செய்து இந்திய பாஸ்போர்ட்டை எந்த நாட்டில் வாங்கினாா்?. எதற்காக வாங்கினாா்? சென்னையில் எங்கு தங்குவதற்காக வந்தாா்? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்தனா். பின்னர் மேல் நடவடிக்கைக்காக அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story