சென்னையை உலுக்கிய வங்கி கொள்ளை: கொள்ளையர்கள் தப்பிச் செல்ல உதவியவர் கைது
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் உடந்தையாக இருந்ததாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை அரும்பாக்கத்தில் நகைக்கடன் வழங்கும் வங்கியில் கடந்த 13ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முருகனின் நண்பரான கேப்ரியல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொள்ளையர்களுக்கு லாட்ஜ் எடுத்து கொடுத்து உதவியதும், அவர்கள் தப்பிச் செல்ல இவர் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. அதேநேரம் முருகன் கேப்ரியலுக்கு 3 சவரன் நகைகளை வழங்கி இருப்பதும் உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story