செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல்


செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல்
x

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 4 ஆண்டுகளாக மதுக்கடை இயங்கி வந்தது. திடீரென நேற்று முன்தினம் இரவு இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதை அறிந்த மது பிரியர்கள் மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறி மதுராந்தகம்- கூவத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட மது பிரியர்களிடம் மீண்டும் கடை இங்கேயே இயங்கும் என்று வருவாய்த்துறையினரும், போலீசாரும் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அவர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

1 More update

Next Story