பாரத் ரத யாத்திரை குழுவுக்கு ஆசிரியர் கூட்டணியினர் வரவேற்பு


பாரத் ரத யாத்திரை குழுவுக்கு ஆசிரியர் கூட்டணியினர் வரவேற்பு
x

பாரத் ரத யாத்திரை குழுவுக்கு ஆசிரியர் கூட்டணியினர் வரவேற்பு அளித்தனர்.

அரியலூர்

தா.பழூர்:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து நாடு தழுவிய பாரத் ரத யாத்திரையை நடத்துகிறது. கடந்த 5-ந் தேதி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு நகரங்களை கடந்து நேற்று காலை அரியலூர் மாவட்டம், தா.பழூர் வந்த யாத்திரை குழுவிற்கு தா.பழூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரும், மாநில துணைத்தலைவருமான எழில் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பாரத் ரத யாத்திரை குழுவில் வந்திருந்த அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஹரி கோவிந்தன், செயல் தலைவர் பசவராஜ் குரிக்கர், இணை பொது செயலாளர் ரங்கராஜன், தேசிய மகளிர் வலையமைப்பு பொறுப்பாளர் சீமா மாத்தூர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன், மாநில பொருளாளர் குமார் ஆகியோர் பாரத் ரத யாத்திரையின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தா.பழூர் வட்டார தலைவர் கருப்பையன், செயலாளர் அன்பு, பொருளாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story