திமுக இளைஞரணி மாநில மாநாடு: இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


திமுக இளைஞரணி மாநில மாநாடு: இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி,

திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக கட்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி அக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி தொடங்கியுள்ளது. இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார்.

8 ஆயிரத்து 647 கிலோமீட்டர்கள் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story