எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு - அடுத்தடுத்து பரபரப்பு


எடப்பாடி பழனிசாமியுடன்  பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு - அடுத்தடுத்து பரபரப்பு
x

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளனர்.

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளனர்.

இவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தரக்கோரி சிடி ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... எடப்பாடி அதிரடி வியூகம் ; வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம்...! பரபரப்புடன் கூடிய பொதுக்குழு சலசலப்புடன் நிறைவு


Next Story