கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்குவதாக பாஜக அறிவிப்பு


கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்குவதாக பாஜக அறிவிப்பு
x

கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் திடீரென கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்ததால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் " என்று தனது டுவீட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் அவர் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.


Next Story