மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது


மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
x

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

மறியல் போராட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் கேளிக்கை விடுதி திறப்பதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது ெபாய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி, அதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெயக்குமார், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

330 பேர் கைது

இதேபோல் தா.பழூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கிழக்கு வட்டார தலைவர் ரங்கநாதன் தலைமையில் சுத்தமல்லி பிரிவு சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 2 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். திருமானூரில் ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் நகர பொறுப்பாளர்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story