பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்


பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
x

கோப்புப்படம்

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

சேலம்,

பா.ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமானவர் கே.பி.ராமலிங்கம். இவர், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்து நினைவிடத்துக்குள் சென்றார்.

இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் கே.பி.ராமலிங்கம் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து கே.பி.ராமலிங்கத்தை இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரவீனா நேரில் சந்தித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உடல் நலம் குணமடைந்தவுடன் சிறையில் அடைக்கப்படுவார் என நீதிபதி பிரவீணா தெரிவித்துள்ளார்.


Next Story