செய்தியாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம் - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
மயங்கி விழுந்த மூதாட்டியை ஒளிப்பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை,
பாஜக தலைமை அலுவலகம் அருகே மயங்கி விழுந்த மூதாட்டியை ஒளிப்பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க கமலாலயத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை காட்சி பதிவு செய்ய ஒளிப்பதிவாளர்கள் முயற்சித்தபோது அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் செய்தியாளர்கள் மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் முறையிட்ட போது, இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்று கூறியதுடன் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story