நாகையில் மாபெரும் புத்தக திருவிழா - கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்


நாகையில் மாபெரும் புத்தக திருவிழா - கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்
x

நாகை மாவட்டத்தில், நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மாபெரும் புத்தக திருவிழா தொடங்கியது.

நாகை,

புத்தகம் வாசிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில், நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மாபெரும் புத்தக திருவிழா தொடங்கியது.

இந்த புத்தக திருவிழாவை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அரங்கத்தில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழா அடுத்த மாதம்(ஜூலை) 4-ந்தேதி வரை நடக்கிறது. அங்கு 100-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர். புத்தகம் திருவிழா தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.


Next Story