கணவனை திருத்த மனைவி போட்ட நாடகம் நிஜமானதால் இருவரும் உயிரிழப்பு


கணவனை திருத்த மனைவி போட்ட நாடகம் நிஜமானதால் இருவரும் உயிரிழப்பு
x

குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய மனைவியின் விபரீத செயல் 2 பேரையும் காவு வாங்கியுள்ளது.

காஞ்சிபுரம்,

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய மனைவியின் விபரீத செயல் 2 பேரையும் காவு வாங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த தாஸ் அதே பகுதியை சேர்ந்த நிகிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான தாஸை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திருத்த நினைத்த நிகிதா, உடலில் மண்ணெண்னெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயல்வது போல் நடித்துள்ளார்.

அப்போது, உண்மையிலேயே நிகிதா உடலில் தீ பரவியதை தொடர்ந்து அவரை கட்டிப்பிடித்து தாஸ் காப்பாற்ற முயன்றுள்ளார். அதில் படுகாயம் அடைந்த நிகிதா கடந்த 2-ம் தேதி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தாஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

1 More update

Next Story