பஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது


பஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது
x

பஸ் டிரைவரிடம் பணம், செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

மதுரை


திருப்புவனம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் வினோத்கான் (வயது 32), தனியார் பஸ் டிரைவர். அவருடன் நடத்துனராக முத்துப்பாண்டி என்பவரும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர்கள் பணி முடிந்து பஸ் நிறுத்துமிடத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது டிரைவர் சட்டைபையில் இருந்து 2,300 ரூபாய் மற்றும் பஸ் டிக்கெட் வருமானம், செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து டிரைவர் வினோத்கான் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணத்தை திருடிய 14 வயது சிறுவனை கைது செய்தனர்.


Next Story