பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு போக்குவரத்தை சீர் செய்யுமாறு நூதனை தண்டனை


பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு போக்குவரத்தை சீர் செய்யுமாறு நூதனை தண்டனை
x

போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார்.

சென்னை,

சென்னையில் போகி பண்டிகையின் போது கடற்கரை சாலையில் வீலிங் செய்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனுக்கு, கீழ்பாக்கம் சிறுவர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் லட்சுமி, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட வேண்டும் என நூதன தண்டனை வழங்கினார்.

இதன் அடிப்படையில் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அண்ணா சதுக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷுடன் சேர்ந்து அந்த சிறுவன் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.


Next Story