கன்னிகாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


கன்னிகாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x

கன்னிகாபுரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 55). கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் செங்கல் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேர்த்தி கடனை செலுத்த தனது மகன்களுடன் மஞ்சுளா திருப்பதிக்கு நேற்று முன்தினம் காலை சென்றிருந்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந் தது. வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளனர். பின்னர், அதில் இருந்த ஒரு பவுன் மதிக்கத்தக்க 2 மோதிரங்கள், ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் போன்றவை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மஞ்சுளா வெங்கல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து கொண்டு சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story