வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை
ஆவடியை அடுத்த கன்னடபாளையம் பொத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லதா காவல் (வயது 61). இவர், தனியாக வசித்து வந்தார். கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான கேரளா சென்றுவிட்டார்.
நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 12 பவுன் நகையை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story