சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி:தமிழக பஸ்கள் ஆந்திர எல்லையில் நிறுத்தம்


சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி:தமிழக பஸ்கள் ஆந்திர எல்லையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Sept 2023 1:00 AM IST (Updated: 10 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால் தமிழக பஸ்கள் ஆந்திர எல்லையில் நிறுத்தம்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகம், ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.317 கோடி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலங்களில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பஸ்கள் நிறுத்தம்

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் ஆந்திர மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம், திருப்பதி செல்லும் 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையான காளிக்கோவில் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

மேலும் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு செல்வதற்கு உண்டான முன்பதிவு மையங்களும் முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளன. சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் குப்பம் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.


Related Tags :
Next Story