பூக்கள் விற்பனை மும்முரம்


பூக்கள் விற்பனை மும்முரம்
x

அருப்புக்கோட்டையில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை, செம்பட்டி, பாளையம்பட்டி, குருஞ்சாங்குளம், புலியூரான், தொட்டியான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் மல்லிகை பூக்கள் விருதுநகர், மதுரை, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையையொட்டி அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படும் மல்லிகைப்பூ நேற்று ரூ.1,300 வரை விற்பனையானது. அதேபோல கோழி கொண்டை பூ ரூ.80-க்கும், செவ்வந்திப் பூ ரூ.240-க்கும், பச்சை ரூ.40-க்கும், மிட்டாய் ரோஸ் ரூ.320-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.360-க்கும், கனகாம்பரம் ரூ.1,600-க்கும், முல்லைப் பூ, பிச்சிப்பூ ரூ.800-க்கும், கேந்திப்பூ ரூ.120-க்கும், துளசி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி விழாவையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள் வாங்க ஆர்வம் காட்டுவதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை காட்டிலும் நேற்று மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story